கோவையில் ஹெல்மெட் விவகாரம்..! போலீசாருடன் வாக்குவாதம் செய்த இளைஞரின் வீடியோ வைரல்..!

கோவை: ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக போலீசார் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் அவரை நிறுத்தி, ஹெல்மெட் அணியாததற்காக ரூ.1000 அபராதம் விதித்துள்ளார்.

CLICK HERE TO READ NEWS:கோவையில் கஸ்டமர் போல் வந்து வெள்ளி கொலுசை திருடிய பெண்- சிசிடிவி காட்சிகள்…

Advertisement

இதற்கிடையில் அதே சாலையில் சிலர் ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் அணியாமலும் வாகனங்களை ஓட்டி சென்றதை பார்த்த விக்கி ஆத்திரமடைந்தார்.

பின்னர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளை வீடியோ எடுத்த அவர், “விக்னேஷ் அண்ணா இது உங்கள் தொகுதி தான்… பாத்துக்கோங்க” என்று கூறியபடி, தனக்கு விதித்தது போல மற்றவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விக்கி வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

  1. First he should pay his fine…then he could raise questions..else complaint to his higher authorities…no need to go MLA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த ரிப்போர்ட்!

கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.