கோவையில் குடிபோதையில் தகராறு..! வாலிபரை பாட்டிலால் குத்திய 2 பேர் கைது..!

கோவை: கோவை கலெக்டர் அலுவலகம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை உடைந்த பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் நேற்று இரவு 3 வாலிபர்கள் சாப்பிட வந்துள்ளனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்ட நிலையில், ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் அருகில் இருந்த பாட்டிலை உடைத்து, மற்றொரு வாலிபரை தாக்கியுள்ளார்.

Advertisement

CLICK HERE TO READ NEWS:வட கோவையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி உயி*ழப்பு..!

இதில் காலில் காயமடைந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திருப்பூர் சி.எஸ்.ஐ காலனியை சேர்ந்த விஷ்ணு சேரன் (27) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியராஜ் (28) என்பது தெரியவந்தது. காயமடைந்தவர் தஞ்சாவூர் ஒரத்தநாட்டை சேர்ந்த விசேஷ் (20) என போலீசார் தெரிவித்தனர்.

CLICK HERE TO READ NEWS: நடுரோட்டில் பெண்ணிடம் ரகளை..! ஆடையை இழுத்த வாலிபர் கைது..!

மேலும், மூவரும் ஈரோட்டில் உள்ள ஓட்டலில் சப்ளையர்களாக வேலை பார்த்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டதாகவும், வேலை தேடி கோவை வந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மது அருந்திய பின் தகராறு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து விஷ்ணு சேரன் மற்றும் பாண்டியராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.