கோவையில் மாயமான சிறுமி பத்திரமாக மீட்பு…

கோவை: கோவையில் மாயமான 16 வயது சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோவையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி அடிக்கடி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது தாய் சிறுமியைக் கண்டித்துள்ளார்.

இதனிடையே நேற்று இரவு 7:30 மணியளவில் வீட்டில் இருந்து திடீரென சிறுமி மாயமாகியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் இரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரவு முழுவதும் மாணவியைத் தேடினர்.

Advertisement

மாணவி எந்த வழியாக சென்றார் என்பது தொடர்பாக காந்திபுரம், 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சிறுமி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளகோவில் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வெள்ளகோவில் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சிறுமியை மீட்டனர்.

பின்னர் அவரை கோவை அழைத்து வந்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...