மாணவர்கள் வருகைக்கு தயாராகும் கோவை மாநகராட்சி பள்ளிகள்..!

கோவை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 17 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 84 ஆரம்பப்பள்ளிகள் மற்றும் ஒரு சிறப்பு பள்ளி உள்ளிட்ட மொத்தம் 148 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

CLICK HERE TO READ NEWS:உரவிலை உயர்வு- கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- தவெக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பில் அதிருப்தி…

Advertisement

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதால், மாநகராட்சி கமிஷனரின் அறிவுறுத்தலின்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் மற்றும் பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

அந்த வகையில், கோவை மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

CLICK HERE TO READ NEWS:இன்ஸ்டாகிராம் காதலால் வெடித்த பெட்ரோல் குண்டு… கோவை பெண்களே, பெற்றோர்களே உஷார்!

இந்த ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...