சூலூர் சிறுமி வழக்கு- முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் ஆவேசம்…

கோவை: சூலூர் சிறுமி வழக்கில் விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Advertisement

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும் என காவல்துறை முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்க வேல் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement


இது போன்ற வழக்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை ஐ.ஜி  
அளவில் விசாரணை நடத்த வேண்டும்.

 சென்னையை போல கோவையிலும் மருத்துவ பரிசோதனை செய்ய டி.என்.ஏ .ஆய்வகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை கல்லூரி மாணவி வழக்கில் 4 மாதத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது. 

Advertisement


இதே போல் இந்த வழக்கிலும் விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...