அஞ்சலையம்மாள் பிறந்தநாள்- கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ மரியாதை…

கோவை: அஞ்சலையம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு தவெக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மரியாதை செலுத்தினார்.

Advertisement

விடுதலைப் போராட்ட வரலாற்றில் “நம்மால் எதையும் சாதிக்க முடியும்” என்ற அசாத்திய துணிச்சலையும், தணியாத நாட்டுப்பற்றையும் விதைத்த வீர மங்கை அஞ்சலையம்மாள் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முக்கிய கொள்கைத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் சிறப்பான முறையில் மரியாதை செலுத்தப்பட்டது. நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த இந்தத் தீரமிக்க தலைவரின் நினைவைப் போற்றும் வகையில் கட்சியினர் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் அஞ்சலையம்மாள் அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அஞ்சலையம்மாளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, நெகிழ்ச்சியோடு தனது மரியாதையைச் செலுத்தினார்.

இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

“வீடியோ எடுக்காதீங்க” என கூறிய அமைச்சர் விக்னேஷ்; ஜனநாயகன் திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை போத்தனூரில் உள்ள அரசன் திரையரங்கில், முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பார்த்தார். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்த காட்சிகள் கவனம் ஈர்த்தன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...