கோவை: கோவையில் இரண்டாவது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலை கட்டியது.
தனியார் செய்தி குழுமம் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து நடத்தும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இரண்டாவது வாரமாக கோவை மாநகர் ஆர் எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது. வழக்கமாக இந்த நிகழ்வில் இடம் பெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் டிஜே நிகழ்ச்சி உடற்பயிற்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர் பல்வேறு உடற்பயிற்சிகளும் இதில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு பொதுமக்கள் அவர்களது வளர்ப்பு பிராணிகளை எடுத்து வந்திருந்தனர் மேலும் பல்வேறு இளைஞர்கள் சைக்கிள் சாகசம் சிலம்பம் சுழற்றி அசத்தினர்.
மேலும் இதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்ற நிலையில் முதியவர்களும் டயர் போட்டி மகிழ்ந்தனர். இதில் பேஸ் பெயிண்டிங் போன்றவையும் இடம்பெற்று இருந்த நிலையில் இளைஞர்கள் கல்லூரி மாணவிகள் ஆகியோர் அவர்களது முகங்களுக்கு வண்ண ஓவியம் தீட்டிக் கொண்டனர்.


