முதல்வர் நாற்காலி குறித்த EPS பேச்சு- பதிலடி கொடுத்த அமைச்சர் சம்பத்…

கோவை: தவெக குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சம்பத்குமார் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

கணபதி பகுதியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஒரு நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்

இந்த நிகழ்வில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி அளிக்கையில், 47 வருடங்கள் கோவையில் வாழ்ந்துள்ளேன் கோவைக்கு தேவையானவற்றை கொண்டு வருவேன் என்றார். கல்வி மருத்துவம் தொழில் துறையை வளர்ச்சி அடைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன் என்றார்.

ஒவ்வொரு நாளும் கோவையை மேம்படுத்த கூடிய அனைத்து திட்டங்களையும் மேற்கொள்வேன் ஒவ்வொரு நாளாக அதனை பார்க்க போகிறீர்கள் என்றும் முதலமைச்சரின் நம்பிக்கையை 100% நிறைவேற்றுவேன் என்றும் கூறினார்.

Advertisement

கடந்த கால ஆட்சியில் தான் ஊழல் இருந்தது அதனை பற்றி தான் திமுகவினர் கூறி வருகிறார்கள் எனவே ஊழலுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
தனியார் பள்ளி கட்டணம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெரியார் அறிவுலகம் கூடிய விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழக வெற்றி கழக முதல்வர் நாற்காலி எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்டம் காணலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்கு நம்பிக்கையை பெற்ற ஆட்சி, மக்களின் செல்வாக்கை பெற்ற ஒரு தலைவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது இனி வரக்கூடிய காலங்களிலும் அவருடைய ஆட்சி தான் தொடரும் மக்களின் நம்பிக்கையே முழுமையாக பெற்று இருக்கிறோம் என்றார்.

Advertisement

கோவை அரசு மருத்துவமனையில் இருதயவியல் துறையில் மருத்துவர் இல்லை என்று கூறி உள்ளனர் மருத்துவமனையில் அது குறித்து விசாரித்து விட்டு அதற்குரிய தேவைகள் முழுமையாக செய்வது அரசின் கடமை என்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Breaking News: கோவை கோனியம்மன் கோயிலில் பரபரப்பு! உண்டியல் புகாரைத் தொடர்ந்து HR&CE அதிகாரிகள் ரெய்டு

கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...