சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்- கோவையில் அமைச்சர் தலைமையில் உறுதிமொழி…

கோவை: சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Advertisement

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுகுமார், கனிமொழி சந்தோஷ், நித்தியனந்தன், சுதாகர், ஸ்ரீகிரி பிரசாத், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தொழிலாளர் துறை அலுவலர்கள், ராமகிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து. சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கையொப்பமிட்டு, கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ராம் சரணுக்கு கோவையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை… எப்போது டிஸ்சார்ஜ்?

வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட நீண்டகால காயத்திற்கு கோவை கங்கா மருத்துவமனையில் நடிகர் ராம் சரண் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...