முதல்வர் விஜய் பிறந்தநாள்- கோவையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

கோவை: முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் பல்வேறு இடங்களில் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.

இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் கட்சியினர் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடினார்.

Advertisement

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அந்த குழந்தைகளுக்கு நினைவுப் பரிசாக தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடினர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

முருக பக்தர்கள் விரும்பும் கந்த சஷ்டி விரதம்… அடுத்த நாட்களுக்கு இதை மறந்திடாதீங்க…!!

கோவை: கந்த சஷ்டி விரதத்தை முருகப் பக்தர்கள் இன்று முதல் துவங்கியுள்ள நிலையில், இந்த 6 நாட்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய பூஜை முறைகள், விரத முறைகள் பற்றி காணலாம். சஷ்டி விரதம் வாழ்க்கையில் இருக்கும்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...