2 மாத ஊதியம் எங்கே? மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பெண்கள் கோவையில் குமுறல்!

கோவை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் நிதி வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து தன்னார்வலர்கள் வனிதா மற்றும் கோகிலா கூறியதாவது:

Advertisement

“நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். தினமும் இரண்டு மணி நேரம் பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ.150 வீதம் மாதம் ரூ.5,500 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், திட்டத்திற்கான நிதி இன்னும் வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். ஏற்கனவே குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் எங்களுக்கு, அந்த ஊதியமும் வழங்கப்படாமல் இருப்பது வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.

Advertisement

எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்குவதுடன், எங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000 ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.