வீட்டில் பதுக்கிய 50 கிலோ புகையிலை; போலீசார் நடவடிக்கை

கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தினர்.

Advertisement

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய மாநகர போலீசார் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் ராதாகிருஷ்ணன் தெரு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

இதையடுத்து, சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.