விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் கம கம விருந்து…! – VIDEO

கோவை: முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்குத்தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் தலைமையில் 1,500 பேருக்கு அன்னதானம் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்குத் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு குடம் உள்ளிட்ட பொருட்கள், குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் 1,500 பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

VIDEO

மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...