கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3 நாள் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறையில் திறன் சார்ந்த மூன்று நாள் “காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி 29.06.2026 முதல் 01.07.2026 வரை நடைபெற உள்ளது.
பயிற்சி கட்டணம் ரூ.5,370/- (ரூபாய் ஐயாயிரத்து முந்நூற்று எழுபது மட்டும்) (வரி கட்டணம் உட்பட). பயிற்சிக்கு முன் பதிவு அவசியம். பயிற்சி கட்டணத்தை நேரடியாகவோ அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
தொடர்பு எண்கள்: 0422-6611336,0422-6611226
அலைப்பேசி எண்: 9361889846; 6379298064; 9543270758
மின்னஞ்சல் : pathology@tnau.ac.in


