கோவையில் விடிய விடிய மழை- பேருந்து நிறுத்த நிழற்குடைகள் இல்லாததால் அவதியுறும் மக்கள்…

கோவை: கோவை மாநகரில் அதிகாலை முதலில் மிதமான மழை பெய்து வருவதால் வேலைகளுக்கும் செல்வோர் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர்.

கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓர் இரவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை மாநகரில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று விடிய விடிய மாநகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில் அதிகாலையில் மழை தொடர்வதால் வேலைகளுக்கு செல்வோர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சற்று சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன.

மழையின் காரணமாக பலரும் குடைகளை பிடித்த வண்ணமும் ரெயின் கோட் அணிந்த வண்ணமும் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோவை மாநகரில் உக்கடம் கரும்பு கடை ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருவதன் காரணத்தினாலும் பேருந்து நிறுத்தங்கள் இல்லாததாலும் மழையில் நனைந்தபடி பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருந்து பயணங்களை மேற்கொள்கின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புறா பந்தய பணத் தகராறு: கோஷ்டி மோதலில் 4 வாலிபர்கள் கைது

புறா பந்தய பணத் தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞரை தாக்கிய 4 பேரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.