கோவையில் ஒரு வாரத்திற்கு பிறகு அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட பெண் சடலம்…

கோவை: சுமார் ஒரு வாரம் கழித்து இறந்த பெண் யார் என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 24 ஆம் தேதி கோவை கோவைபுதூர் பகுதியில் நிர்வாண கோலத்தில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர் யார் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக மதுக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisement

பெண்ணின் அங்க அடையாளங்களை வைத்தும் அதனை விளம்பரப்படுத்தியும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் எந்த ஒரு சிசிடிவி கேமராக்களும் இல்லாததால் குற்றவாளியை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்ட சூழலில் தற்பொழுது உயிரிழந்த இளம் பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பர்ஷா என்பது தெரியவந்துள்ளது.

பர்ஷா அவரது கணவர் ஜெகநாத் உடன் கோவைபுதூர் அடுத்த ஈஸ்வர் நகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஜெகநாத் மேசன் பணியில் ஈடுபட்டு வந்ததும் இருவரும் கட்டிட கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும் தற்போது கணவர் ஜெகநாத் தலைமறைவாகி இருப்பதுடன் ஜெகன்நாத்தின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருப்பதால் கொலையாளி அவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெகன்நாத்தை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...