கோவையில் பள்ளி சீருடையில் விதிகளை மீறிய மாணவர்கள்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் ஒரே டூ-வீலரில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 4 பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

​கோவை மாநகர் ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் பள்ளி மாணவர்கள் 4 பேர் போக்குவரத்து விதிகளை மீறி டூ-வீலரில் சென்ற அதிர்ச்சி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளது.

Advertisement

கோவை, நேரு வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள், பள்ளி சீருடையுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் நகரின் மிக முக்கிய பகுதியான காந்தி பார்க் சாலையில் சென்றுள்ளனர்.

டூ-வீலரில் மூன்று பேர் செல்வதே சட்டப்படி தவறு எனும் போது, ஹெல்மெட் கூட அணியாமல், ஒரே வாகனத்தில் நான்கு பேராக அமர்ந்து மற்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வளைவுகளில் சென்று உள்ளனர்.

இதனை ​பின்னால் காரில் வந்த வாகன ஓட்டி ஒருவர், இந்த மாணவர்களின் விபரீதப் பயணத்தை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சமீப காலமாகக் கோவையில் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கி கொடூர விபத்துகளில் சிக்குவது தொடர் கதையாகி வரும் நிலையில், இந்த வீடியோ பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ஆர்.எஸ்.புரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

2 COMMENTS

Comments are closed.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...