கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட உரமூட்டைகள்- பறிமுதல் செய்த கோவை மக்கள்…

கோவை: கோவையில் கர்நாடகாவில் இருந்து உரங்களைக் கொண்டு வந்து தமிழகத்தில் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற உரங்களை ஊர் பொதுமக்கள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் Terra Polymers என்ற நிறுவனம் கர்நாடகாவில் இருந்து உரங்களைக் கொண்டு வந்து தமிழகம்-கேரளா பகுதியான திருமலையாம்பாளையத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் உரிமையாளர் ஆசிப் என்பவருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயி மாதேஸ்வரன்-க்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் சென்று உரங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஊராட்சி செயலாளர் கேட்ட போது இது சம்பந்தமாக தெரியவில்லை என்று அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் ஒரு விவசாயிக்கு ஒரு மூட்டை உரம் கிடைப்பதற்கு கடும் தட்டுபாடு விதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கு 10,000-க்கும் மேற்பட்ட உரம் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...