கோவை: கோவையில் படைவீரர், அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதுமட்டுமின்றி சுயதொழில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கக் கூட்டம் 17.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது விண்ணப்பங்களை இரட்டைப் பிரதிகளாக சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.




