கோவையில் அதிர்ச்சி நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்!

கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர், நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்குச் சென்று தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது காந்தி நகர் அருகே அவர் நடந்து சென்றபோது, ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார். திடீரென அந்த வாலிபர், இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் பைக்கில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

Advertisement

இருப்பினும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் வந்த பைக் எண்ணை அந்தப் பெண் கவனித்து மனதில் பதித்துக் கொண்டார். பின்னர் இதுகுறித்து சுந்தராபுரம் போலீசில் பைக் எண்ணுடன் புகார் அளித்தார்.

coimabtore crime news today

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் சுந்தராபுரம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த யுவராஜ் (25) என்பது தெரியவந்தது. மேலும், அவர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து போலீசார் யுவராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கோவை பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...