கோவை: இன்று கோவையில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஜூலை -2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் இன்று 11.07.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
இந்த குறைதீர் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம், மற்றும் குடும்பத்தலைவர் புகைப்படம் மாற்றம், தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட பவன்குமார்
ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.




