ஓய்வூதியர்களின் குறைகள்- கோவை ஆட்சியர் அலுவலர்களுக்கு இட்ட உத்தரவு…

கோவை: ஓய்வூதியர்களின் மனுக்கள் குறித்து நடவடிக்கைக எடுத்து இறுதி அறிக்கை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

கோயமுத்தூர் மாவட்டத்தில், நடைபெற்ற ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய குறைகளைவுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய குறைகளைவுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஓய்வு ஊதியதாரர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சுஜாதா, துணை ஆணையர் (கலால்) சாதனைக்குறள், ஓய்வுப்பெற்ற பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கோயமுத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்களின் குறைகளைவுக் கூட்டத்தில் ஓய்வூதிய பயன்கள்புதிய மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ செலவின தொகை திருப்பி செலுத்துதல் என மொத்தம் 67 மனுக்கள் கடந்த ஒரு மாதமாக பெறப்பட்டுள்ளது. அவை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மேலும் பெறப்பட்டுள்ள ஓய்வூதிய பலன்கள். மருத்துவ செலவின தொகை, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவை கோரி விண்ணப்பித்த ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

இந்நேர்வில் இடைக்கால அறிக்கை பெறப்பட்ட மனுக்களுக்கு துறைச்சார்ந்த அலுவலர்கள் முறையாக தீர்வு கண்டு மனுதாரருக்கு தகவல் தெரிவித்து இறுதி அறிக்கை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...