கோவை: ரேசன் கார்டுகளில் கைரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் (AAY), முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள்(NPHH) பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் PoS Machineவிரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணியில் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் (AAY) 95.03%, முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH)- 95.10% மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH) 84.48% மட்டுமே நிறைவடைந்துள்ளது
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை(AAY) 7033முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) 49324 மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (NPHH) 341425 என மொத்தம் 397782 குடும்ப உறுப்பினர்கள் விற்பனை முனைய இயந்திரத்தில் (PoS Machine) விரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவு செய்யாமல் நிலுவையிலுள்ளது.
எனவே, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பயன்பெறும் அனைத்து அன்ன யோஜனா குடும்ப அட்டை(AAYமுன்னுரிமை குடும்ப அட்டைகள்(PHH) மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH) பெற்றுள்ள குடும்ப அட்டைத்தாரர்களின் குடும்பங்களில் கைரேகைப் பதிவு விடுபட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளிலோ அல்லது அருகே உள்ள நியாய விலைக் கடைகளிலோ எதிர்வரும் 31.07.2026 தேதிக்குள் விரல்ரேகையினை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
பணியினை நிறைவு செய்வதற்கு ஏதுவாக விடுபட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் விரல்ரேகை பதிவு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரின் உத்திரவின்படி, 11.07.2026 முதல் 31.07.2026 வரை பிற்பகலில் விடுபட்ட உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேரில் வரும் சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறும் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர்
பவன்குமார் தெரிவித்துள்ளார்.





