மக்கள் தொகை கணக்கெடுப்பு- கோவை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…

கோவை: மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டமானவீட்டுக் கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் பட்டியலிடல் (HLO) பணிகள் துவங்கவுள்ளன.

பொதுமக்கள் 17.07.2026 முதல் 31.07.2026 வரை https://secensus.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) செய்து கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பின்னர் கிடைக்கும் 12 இலக்க எண்ணை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருந்து, கணக்கெடுப்பாளரிடம் வழங்கி விவரங்களை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால், கோயம்புத்தூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்று, கணக்கெடுப்பு பணிக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ துவக்கிய ஜனநாயகன் பாஸ்போர்ட்…

கோவை: ஜனநாயகன் பாஸ்போர்ட் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கினார்கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஜனநாயகன் திரைப்படக் கொண்டாட்டத்துடன் சமூகப் பொறுப்பையும் விதைக்கும் புதிய முயற்சியாக, ஜனநாயகனைக் கொண்டாடுவோம் பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம் என்ற...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...