கோவை: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கார்கோ மூலம் கோவைக்கு கொண்டுவரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் ஜெயவேல், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருக பிரபு ஆறுமுகம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர் சுந்தரராஜன், திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா பாலாஜி அழகு ராஜன் உள்ளிட்ட 10 தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்
அதனை தொடர்ந்து அவர்களது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் சென்னைக்கு 4 உடல்கள் கோவைக்கு 6 உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி 6 பேரின் கோவைக்குக் கொண்டு வரப்பட்டு அமரர் ஊர்தி மூலம் அவரவர் ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது
கோவை கோட்டாட்சியர் மாருதி பிரியா உடலை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மூன்று பேரின் உடல்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு அமரர் ஊர்திகள் மூலம் அவரவர் ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.




