வியாபாரிகளை மிரட்டி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது…

கோவை: ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

ஆபாச படம் பார்த்ததாக வடமாநில வியாபாரிகளை மிரட்டி பண மோசடி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் வசிக்கும் வட மாநில வியாபாரிகளின் செல்போன் எண்ணை அறிந்து கொண்டு போலீசில் இருந்து அழைப்பதாக கூறி ஒரு கும்பல் அந்த கும்பல் நீங்கள் ஆன்லைனில் ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து புகைப்படத்துடன் நகரம் முழுவதும் வெளியிடுவோம் அதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் கூறும் எண்ணிற்கு உடனே ஆன்லைனில் பணம் அனுப்ப வேண்டும் என்றும் கூறி மிரட்டி உள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த வியாபாரிகள் பலரும் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளனர்.ப்இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்கள் வந்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Advertisement

இதில் வடவள்ளி பி என் புதூர் பகுதியைச் சேர்ந்த பின்னி, சரவணம்பட்டியைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோர் வடமாநில வியாபாரிகளை மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பெற்றது தெரிய வந்தது. உடனே அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் கிஷோர் குமார் மீது கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் உள்ளன. இது தொடர்பான பின்னணியில் கூட்டாளிகள் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூபாய் 15 லட்சம் மோசடி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.