கோவை: கோவையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோயமுத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (MICRO JOB FAIR) மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
ஜூலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.07.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் கோயமுத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு பத்தாம் வகுப்புபன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
இம்முகாமில் கலந்துகொள்ள வயதுவரம்பு இல்லை. அனுமதி இலவசம், பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0422-2642388 என்ற தெலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்
மேலும் குறிப்பாக தனியார் மருத்துவமனையில் ANM. GNM மற்றும் B.Sc (Nursing) படித்தவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் உள்ளன. இக்கல்வித் தகுதியை உடைய மனுதாரர்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.





