ஆனைகட்டி ITI யில் சேர்வதற்கு கடைசி நாள் அறிவிப்பு

கோவை: ஆனைகட்டி ITI யில் சேர கடைசி நாள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது) ஆனைகட்டியில் 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கையானது 15.06.2026 முதல் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேரடி சேர்க்கைக்கு கடைசி நாள் 31.07.2026ஆகும்.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் Electrician/ Fitter/ MMV) Wireman (இரண்டு வருட பயிற்சிக்காலம் மற்றும் Welder (ஓராண்டு பயிற்சிக்காலம்) ஆகிய தொழிற்பிரிவுகள் (ஆண் /பெண்) இருபாலருக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltrainingtn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் (ஆதார் அட்டை PASSPORT SIZE புகைப்படம், அசல் சான்றிதழ்கள் ) ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்க்கை உதவி மையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சியில் சேர கல்வி தகுதி 8 ஆம் வகுப்புதேர்ச்சி (Wireman மற்றும் Weldernoஆம் வகுப்பு தேர்ச்சிd (Electrician/ Fitter, MMV) பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு வயது வரம்பு 14 வயது முதல் 40 வயது வரை, மகளிர்க்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச BUS PASS பிரதி மாதம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு தவித்தொகை ரூ. 1000/ தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை ரூ 1000/ மற்றும்வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை ரூ. 750/- விலையில்லா NIMI பாடப்புத்தகங்கள், சீருடைகள்காலணிகள் வரைபடக் கருவிகள் மற்றும் மிதிவண்டி வழங்கப்படும்.

Advertisement

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் முன்னணி நிறுவனங்களில் CAMPUS INTERVIEW மூலம் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு இடவசதி பொறுத்து உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் 9499055693 9499055694, 9994555884, 9443015904, 9994449920, 9942128234, 9500249705, 9865796373 மற்றும் 9842852850 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...