கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து…

கோவை: கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் லட்சக் கணக்கில் பொருட்கள் எரிந்த நாசமாகின.

Advertisement

கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், பி. என்.புதூர் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் நிறுவனம் உள்ளது.
2 தளங்களை கொண்ட இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் எந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது நேற்று பணி முடிந்ததும் அனைவரும் குடோனை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு பிளாஸ்டிக் குடோனில் திடீரென்று தீப்பிடித்து உள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென்று பரவி கட்டிடத்திற்கு உள்ளே இருந்து கரும் புகை வெளியேறியது.

இதைப் பார்த்த பொதுமக்கள் கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதிக அளவில் தீ பரவியதால் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணபதி உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்கு கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்ப சாமி தலைமையில், தொண்டாமுத்தூர், பீளமேடு, கோவை வடக்கு, தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலகங்களில் இருந்து வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் அங்கு சென்றனர்.

Advertisement

2 தளங்களில் பிளாஸ்டிக் குடங்கள் எரிந்ததால் அதிக அளவில் வெப்பம் சுட்டெரித்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்து தண்ணீரை பேச்சு எடுத்தும், நுரைகளை பயன்படுத்தியும் தீயை அணைக்க போராடினர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்குள் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமாகின இந்த குடோனில் ஏற்பட்ட தீ பாதிப்பு அருகில் உள்ள மாவு மில் பகுதிக்கும் பரவியது.

Advertisement

இதனால் அங்கும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து நடந்த குடோன் அருகில் ஏராளமான வீடுகள் இருந்தன. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் நுரை மூலம் தீயை அணைத்ததால் பிற இடங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்து ஏற்பட்டது காரணம் என்ன என்பது குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. சேதமதிப்பு உடனடியாக தெரியவில்லை.
லட்சக்கணக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...