கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோவை நீதிமன்றம் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், நீதிபதிகள் வெளிப்படைத் தன்மையோடு நியமிக்கப்பட வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் தென்னிந்தியாவிலும் அமைக்கப்பட வேண்டும் அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகள் தனி ஓய்வறை அமைக்கப்பட வேண்டும்,
ஈ பைலிங் நடைமுறையில் உள்ள குளறுபடிகள் களையப்பட வேண்டும் அதற்கான உள் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் இளம் வழக்கறிஞர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை உத்திரவாதப்படுத்த வேண்டும் தனியார் சட்டக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதேபோல் கோவை நீதிமன்ற வளாகத்தில் இ சேவை மையங்களில் நிழல் தரும் குறைகள் அமைக்கப்பட வேண்டும் ஒவ்வொரு தளத்திலும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் வழக்கறிஞர்கள் அமர்வதற்கு போதுமான நாற்காலிகளை அமைத்து தர வேண்டும் வழக்கறிஞர்கள் வழக்காடிகள் நீதிமன்ற ஊழியர்களின் அவசர மருத்துவ தேவைக்கு ஐ சி யு வகை கொண்ட ஆம்புலன்ஸை நீதிமன்ற வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கோவை நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.





