கோவை: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் கைரேகை இயக்கத்தை துவக்கி உள்ளனர்.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கைரேகை இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மக்கள் இயக்கம் ஆனது துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களை சந்தித்து ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து எடுத்துரைத்து அவற்றுக்கு எதிராக பொதுமக்களின் கைரேகைகளை பதிவு செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர். அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் கைரேகை பதிவு செய்யும் முன்னெடுப்பானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் சிவானந்த காலனி பகுதியில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கைரேகை இயக்கம் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று அவர்களது கை ரேகைகளை பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மக்களிடத்திலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மக்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.





