கல்வி காசோலை உயர்கல்வி சேர்க்கை ஆணைகளை மாணவர்களுக்கு வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர்…

கோவை: கோவையில் மாணவர் குறை தீர்ப்பு முகாமில் காசோலை மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில், 14 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், 6 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்களையும், 25 மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கான சேர்க்கை ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் வழங்கி, மாணாக்கர்களை வாழ்த்தினார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில், மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் 14 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மொத்தமாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், 6 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்களையும்25 மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கான சேர்க்கை ஆணைகளையும் வழங்கி, மாணாக்கர்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

கடந்த 10.07.2026 அன்று நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்புக் குறைதீர் முகாமில், 273 மாணக்கர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். 71 மாணவர்கள் பல்வேறு வகையான சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்தனர். 85 மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர். 67 மாணவர்கள் கல்விக் கடன் வேண்டி விபரங்கள் சேகரித்துச் சென்றுள்ளனர்.

அதன்படி உடனடிச் சேர்க்கைக்காக 49 மாணவர்கள் வருகை புரிந்ததில் 33 மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...