கோவை: கோயமுத்தூர் மாவட்டத்தில், குறு, சிறுமற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.
கோயமுத்தூர் மாவட்ட தொழில் மையத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்மதன் ராஜா தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் 17 பயனாளிகளுக்கு புதிய தொழில் முனைவோர் திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம்தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகைகள் தயாரிப்பு. ஆடைகள் விற்பனை தையல் தொழில், உணவு விடுதி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, அழகு சாதனப் பொருட்கள் விற்பனை பலசரக்கு அங்காடி, தென்னை நார் கழிவுப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மேற்கொள்ள ரூ.63.18 இலட்சம் மானியத்திற்கான மானிய பட்டுவாடா கடன்தொகை பட்டுவாடா ஒப்பளிப்பாணைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம். பெண்கள் முன்னேற்றம் இளைஞர்களின் திறன் மேம்பாடு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி ஆகியவற்றிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாகதொழில் முனைவோர்களுக்கு தேவையான அனைத்து அரசு சேவைகளும் எளிதாக கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக உருவாக வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்பெண்கள் தொழில் முனைவோர்களுக்கு தனித்துவமான ஊக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவு அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன.
நமது மாநிலம் இன்று இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இதனை மேலும் வலுப்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் இதன்மூலம் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, புதிய முன்னேற்றப் பாதையை உருவாக்கி கொள்ள வேண்டும். நமது மாநிலம் மேலும் வளர்ச்சி பெற, அனைவரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும் என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள்புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித் தொழில் கூட்டுறவு அலுவலகம், சிட்கோ மண்டல சோதனைக்கூடம், தமிழ்நாடு முதன்மை நார் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம். தாய்கோ வங்கி மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க மையத்தின் சார்பில் செயல்படுத்தும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, பயனாளிகள் திட்டங்கள் பெற்று பயனடைய உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.





