கோவை: கோவையில் கஞ்சா மற்றும் மெத்தப்பட்டமைன் மாத்திரையை வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதை இல்லா கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் கே எஸ் பி அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபொழுது இரண்டு இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண்டு இருந்துள்ளனர்.
அவர்களை அழைத்து விசாரித்த பொழுது அவர்களிடம் 110 கிராம் கஞ்சா மற்றும் 2.3 கிராம் மெத்தப்பட்டமைன் போதை மாத்திரை இருப்பது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்ட பொழுது அவர்கள் பெயர் சஞ்சய் மற்றும் ஹரிஷ் என்பதும் கோவை கஸ்தூரி பாளையம் குப்பிச்சிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்ததை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர் மேலும் அவர்களுக்கு இந்த கஞ்சா மற்றும் போதை மாத்திரை எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




