கோவை: கோவையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை எல் & டி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளும், மலேசியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
Also Read: கோவை போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ஏலம்; எப்போது?
போட்டியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்து, வீரர், வீராங்கனைகளின் கராத்தே சாகசங்களை பார்வையிட்டார்.
கட்டா (Kata) மற்றும் குமித்தே (Kumite) ஆகிய இரு பிரிவுகளில், பல்வேறு வயது மற்றும் எடைப் பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றன.
குறிப்பாக இந்தியா மற்றும் மலேசியா வீரர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
இதனிடையே போட்டியின் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த வீரரும், மலேசிய நாட்டைச் சேர்ந்த வீரரும் கராத்தே போட்டியில் மோதிக்கொண்டனர் அந்த வீடியோ காட்சிகளை இங்கே காணலாம்
VIDEO
போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.





