சிறப்பு குழந்தைகள் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சம்பத் நெகிழ்ச்சி உரை…

கோவை: ஒவ்வொரு மாற்றுத்திறனாளி குழந்தையும் சிறப்பு குழந்தைகளும் தனித்துவமான திறமைசாலிகள் ஒவ்வொரு குழந்தையின் திறமையும் சமூகத்தின் பெருமை சரியான கல்வியும் ஊக்கமும் கிடைத்தால் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் உயரம் எட்டுவார்கள் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாற்றுத்திறன் குழந்தைகளின் திறமைகள் வெளிப்பாடு கோவையில் துளிர் சிறப்புப் பள்ளியின் 9-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது

கோவையில் செயல்பட்டு வரும் துளிர் சிறப்புப் பள்ளியின் 9-ஆம் ஆண்டு விழாவில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது பல்துறை திறமைகளை வெளிப்படுத்திய நிலையில், அமைச்சர் சம்பத்குமார் குறும்படத்தை வெளியிட்டு மாணவர்களை பாராட்டினார்.

கோவை ரத்தினபுரி–குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான துளிர் சிறப்புப் பள்ளியின் 9-ஆம் ஆண்டு விழா சிவானந்தா காலனியில் உள்ள காமராஜர் கலையரங்கில் நடைபெற்றது.

Advertisement

இந்த விழாவில் தமிழக அமைச்சர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தந்தையுடன் ஒரு நாள் என்ற குறும்படத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூக பங்கேற்பை ஊக்குவிக்கும் இதுபோன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கவை எனவும்
மாற்றுத்திறனை குறையாக பார்க்காமல் அவர்களின் திறமையை வளர்க்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.

Advertisement


மேலும் கல்வி திறன் மேம்பாடு மற்றும் சமூக பங்கேற்புடன் இதுபோன்ற முயற்சிகள் மிகுந்த ஊக்கமாக அவர்களுக்கு அமைவதாக இவ்வாறு அமைச்சர் சம்பத்குமார் சிறப்புரையாற்றினார்.

விழாவை ஒருங்கிணைத்த துளிர் சிறப்புப் பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் வெங்கடேசன், பள்ளியின் சேவைகள் மற்றும் ஆண்டு விழாவின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம் குமார், அபிராமி கல்லூரி ஆஃப் ஆக்குபேஷனல் தெரப்பியின் முதல்வர் டாக்டர் நரேஷ்பாபு கருணாகரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளி குழந்தைகள் நடனம், பாடல், நாடகம், பேன்சி டிரெஸ் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் ஆண்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...