சோனம் வாங்சுக்கு ஆதரவாக கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக போராடும் சோனம் வாங்சுக்கு ஆதரவாகவும் ஒன்றிய அமைச்சர் தரமேந்திர பிரதான பதவி விலக கோரியும் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

ஒன்றிய பாஜக அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக போராடிய சோனம் வாங்சுக்கி ஆதரவாகவும், ஒன்றிய அமைச்சர் தரமேந்திர பிரதான பதவி விலக கோரியும், சிஐடியு, விச, விதொச, ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர், மாணவர் சங்கம் மற்றும் தமுஎகச உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் சார்பில் ஒரு நேரம் உண்ணா நிலை இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். தேசிய கல்வி கொள்கை (NEP – 2020) ரத்து செய்ய வேண்டும். தரமேந்திர பிரதான பதவி விலக வேண்டும், மேலும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய சோனம் வாங்சுக்கி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டது கண்டித்தும் , மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு , தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், உள்ளிட்ட இடதுசாரி வெகுஜன அமைப்புகள் சார்பில் திரளானோர் பங்கேற்றனர்.

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு , விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், டிஒய்எஃப்ஐ, எஸ்எஃப்ஐ மற்றும் தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...