Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் வாரம் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. இந்த நாளில், மின்வாரிய ஊழியர்கள் மின் வயர்கள் மீது உராயும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், பழுதான கம்பிகளை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், கோவை மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24.07.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஸ்கோர்ஸ் (Race Course) துணை மின்நிலையம்:
தாமஸ் பார்க் (Thomas Park), காமராஜர் சாலை (Kamarajar Road), ரேஸ்கோர்ஸ் (Race Course), அவிநாசி சாலை-அண்ணா சிலை முதல் கலெக்டரேட் வரை (Avinashi Road -from Avinashi road to collectrate), திருச்சி சாலை -கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை (Trichy Road – from kannan department to Ramanathapuram signal), புலியகுளம் சாலை – சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை (sungam to vinayagar temple) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பதுவம்பள்ளி (Paduvampally) துணை மின்நிலையம்:
பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்காபாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokampalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
எனவே, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பகுதிகள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.





