ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார்.

இயக்குனர் வினோத் இயக்கத்தை நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இதனை நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள், தவெக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கங்கா யமுனா காவேரி திரையரங்கில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

Advertisement

இதில் DJ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இங்கு கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் விஜயின் பாடல்களுக்கு ஆடி பாடியும் கொண்டாடினார்.
ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னிட்டு திரையரங்கு பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

மேலும் இந்த திரையரங்கில் திரைப்படத்தை காண்பதற்கு அமைச்சர் சம்பத்குமார் வருகை புரிந்தார். அவருக்கு தவெக கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

Advertisement

அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பேசுகையில் இது எங்களுக்கு நெகிழ்ச்சியான தருணம் முதல் நாள் காட்சி எங்களுக்கு கடைசிக் காட்சியாக தோன்றுகிறது மனதிற்குள் வலி இருந்தாலும் நாட்டுக்கு தேவை மக்களுக்கு தேவை என்பதை உணர்ந்து வலிகளை தாங்கிக் கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்.

ரசிகன் என்பதே என்னுடைய முதல் அடையாளம் என்று கூறிய அவர் ஏற்கனவே முதல்வர் வகுத்த பாதையில் தான் பயணித்து கொண்டிருந்தேன்
தற்போது எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதனை நல்லமுறையில் செயல்படுத்துவேன் என்றார். பொதுமக்களுக்கு
இடையூறு இல்லாத கொண்டாட்டங்கள் நடத்துவது வரவேற்கத்தக்கது, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தான் எங்கள் கொண்டாட்டங்கள் இருந்து வருகிறது என்றார். ஆன்லைனில் திரைப்படம் வெளியாகி என்ன சதித்திட்டம் செய்தாலும் திரையரங்குகளில் பார்ப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி மக்களுக்கான பணியை தலைவர் ஆற்றி வருகிறார் என்று தெரிவித்தார்.

சென்சார் விவகாரம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் குழந்தைகளும் பார்க்க வேண்டும் என ஆசைபடுகிறார்கள், அது நம் கையில் இல்லை என்று கூறி படம் பார்க்க சென்றார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...