கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் 98% முடிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி திட்டபணிகள் அனைத்தும் விரைவில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏதுவாக,

மேட்டுப்பாளையம் சாலையில் முருகன் மில் முதல் ஐடிஐ வரையிலும், திருச்சி சாலையில் ஒண்டிப்புதூர் முதல் ஒப்பணக்காரவீதி போத்தீஸ் சந்திப்பு வரையிலும், அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி கலைக்கல்லூரி முதல் தண்டு மாரியம்மன் கோயில் வரையிலும், குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் 24.07.2026 முதல் ஆரம்பிக்கப்பட்டு 31.08.2026-க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆகவே, பொதுமக்கள் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையாளர் தகட்டா ரவி தேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெல்லி போராட்டம்- கோவையில் காத்திருப்பு போராட்டம் மூலம் ஆதரவு…

கோவை: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக அலுவலகத்திற்குள் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுக அலுவலகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...