ஜனநாயகன் பார்த்து அழுவது ஏன்?- கோவை அமைச்சரின் உருக்கமான விளக்கம்…

கோவை: ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

கோவை மாநகராட்சி 83வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., மைதானம் அருகே வாலிபால், கபடி மற்றும் இறகுப்பந்து போட்டிக்கான உள்ளரங்கு விளையாட்டு மைதானம் திறப்பு விழா இன்று நேரு ஸ்டேடியம் அருகே உள்ள பகுதியை நடந்தது

அமைச்சர் சம்பத்குமார் திறப்பு விழாவில் பங்கேற்று திறந்து வைத்தார். பின்னர் வீரர்களுடன் வாலிபால் விளையாடி மகிழ்ந்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், கோவை மாநகராட்சி ஐந்து மண்டலக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அங்கன்வாடி மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏ ஆர் மற்றும் ஜி ஆர் மையங்கள் திறப்பு விழா, ரூ.10 கோடி 69 லட்சம் கோடி மதிப்பில் திறப்பு விழா நடந்தது.

Advertisement

விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழியில் கோவை நேரு ஸ்டேடியம் அருகே வாலிபால், கபடி, இறகுப் பந்து, வுஷூ போட்டிக்கான விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டது. இதுபோன்ற இன்று மட்டும் 14 இடங்களில் புதிய மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சின்னவேடம்பட்டி பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; மக்களுக்கும் புரியும்படி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement

ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து எழுப்பிய கேள்விக்கு..? எல்லாரும் மனிதர்கள் தான் நாங்கள் அமைச்சர் என்றாலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களுடன் தான் பயணித்துக் கொண்டிருந்தோம் இப்போது இங்கு அமர்ந்துள்ளோம் எங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது.

கடந்த 30 ஆண்டு காலமாக அந்த இடத்தில் அமர்ந்து ரசிகனாக அவரை ரசித்து வந்தோம் இனி பெரிய திரையில் அவரை பார்க்க முடியாது என்ற ஆதங்கத்தால் எங்களை மீறி கட்டுப்பாடுகளை மீறி எங்களது எமோஷன் வெளிப்பட்டது அதில் நானும் உள்ளேன் என அறிகிறேன்.

நாங்கள் கட்டுப்படுத்த முயன்றோமானால் முடியவில்லை. அதை வைத்து அரசியல் ஆக்க வேண்டிய அவசியம் தவெகவிற்கு இல்லை. மக்கள் பணி செய்து எங்கள் இருப்பை காட்டினால் போதும், அதேபோல் கண்ணீர் சிந்தியது எங்கள் பிரைவசி திரையரங்கில் நடைபெற்றது தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த இலங்கை நாட்டினர் மீட்பு

கோவை: கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் உரிய ஆவணங்களின்றிச் தங்கியிருந்த பெண் உட்பட 3 இலங்கை நாட்டினரை பிடித்த போலீசார்திருச்சி அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைப்பி வைத்தனர். கோவை வேலண்டிபாளையம் பகுதியில் நேற்று...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...