கோவை: கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் உரிய ஆவணங்களின்றிச் தங்கியிருந்த பெண் உட்பட 3 இலங்கை நாட்டினரை பிடித்த போலீசார்திருச்சி அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைப்பி வைத்தனர்.
கோவை வேலண்டிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனளர். இதனை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சாய்பாபா காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களின் பேச்சு மாறுபட்டு இருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அவர்கள் 4 பேரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், அவர்களில் 2 பேர் 2023ம் ஆண்டு இந்தியா வந்து சுற்றுலா விசா காலம் முடிந்த பிறகும், எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாகக் கோவையில் தங்கியிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சயந்தன் (28) மற்றும் ஜெரோன் (22) என்பதும், அவர்கள் கோவையில் தங்கிருந்து பெயின்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் குறித்து தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் அவர்களை நேற்று திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.
அதேபோல், கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் இலங்கை பெண் ஒருவர் உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அப்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் 2018-ம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் கோவை வந்ததும், விசா காலம் முடிந்த பிறகும் கடந்த சில ஆண்டுகளாக இங்கேயே சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த பெண்ணையும் திருச்சி அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.





