கோவையில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் முகாம்…

கோவை: கோவையில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NAM)அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோவையில் 10.08.2026அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார்துறை நிறுவனங்களும் பங்கேற்று300 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும்.

தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் NAC பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.

Advertisement

தொழிற்பழகுநர் பயிற்சியின்போது உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
எட்டாம் வகுப்புமுதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை Degree மற்றும் Diploma தேர்ச்சி தோல்வி அடைந்தவர்கள் மற்றும் அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் NCVT மற்றும் SCVT தேர்ச்சி பெற்றவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குநர்மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் கோயம்புத்தூர். 9499055687, 8680955850, 9488462613 9698091915 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவை: உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் என தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது எனக்கு...

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை: வாடிக்கையாளர் போல் வந்து ஐஃபோனை களவாடிய பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில்...