மருதமலை அருகே கருஞ்சிறுத்தை- வனத்துறையின் எச்சரிக்கை…

கோவை: கோவை மருதமலை அருகே கருஞ் சிறுத்தை நடமாடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

​கோவை, மருதமலை அருகே உள்ள லெப்ரஸ் காலனி பகுதியில் கருஞ்சிறுத்தை இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுயானைகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் தற்போது மருதமலை லெப்ரஸ் காலனி பகுதியில் உள்ள மலைப் பாறைகளுக்கு இடையே கருஞ்சிறுத்தை நடமாடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்து உள்ளதால், லெப்ரஸ் காலனி மற்றும் மருதமலை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சிறு குழந்தைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை மின்தடை அறிவிப்பு: நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.