கோவையில் உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது…

கோவை: கோவையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணாக்கர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத மாணாக்கர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் உயர்வுக்குப்படி சிறப்பு முகாம் 07.08.2026 முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளதாவது,கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025-2026 ம் கல்வியாண்டில் பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணாக்கர்களில் இதுவரை உயர்கல்வியில் சேராத அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் உயர்வுக்குப்படி சிறப்பு முகாம் எதிர்வரும் 07.08.2026 முதல் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து 2025-26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை மற்றும் வழிகாட்டி உயர்வுக்குப் படி சிறப்பு முகாம் ஆனது நான்கு இடங்களில் நடைபெற உள்ளது.

Advertisement

07.08.2026 அன்று கற்பகம் உயர்கல்வி நிறுவனம் ஈச்சனாரியிலும், 10.08.2026 அன்று NGM கலை அறிவியல் கல்லூரி பாலக்காடு ரோடு பொள்ளாச்சியிலும், 11.08.2026 அன்று Dr.R.V கலை அறிவியல் கல்லூரி காரமடையிலும் 13.08.2026 அன்று ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி நவ இந்தியாவிலும் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் நேரடி சேர்க்கைக்காக முன்னணி கல்வி நிறுவனங்கள் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள்ITI மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்றவற்றிலிருந்து அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் முன்னணி வங்கிகளில் இருந்து கல்வி கடன் வசதிக்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தர உள்ளது. உயர்கல்விக்கு தேவைப்படும் அரசு சான்றிதழ்கள் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

எனவே மாணவர்கள் இந்த கல்வியாண்டிற்கான இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து 2025-2026 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை மற்றும் வழிகாட்டி உயர்வுக்குப் படி சிறப்பு முகாம் ஆனது நான்கு இடங்களில் நடைபெற உள்ளது.

இதனை சம்மந்தப்பட்ட மாணாக்கர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...