கத்திரிக்காய் விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கத்திரிக்காய்க்கான விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் 2024-25 ஆம் ஆண்டிற்கான இறுதி மதிப்பீடுகளின்படி, கத்திரிக்காய் உற்பத்தியில் இந்தியா உலகளவில் முக்கிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நாட்டிற்குள் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் குஜராத் ஆகியவை முக்கிய உற்பத்தி மாநிலங்களாக உள்ளன.

இந்தியாவில் 2024-25 ஆம் ஆண்டில் 6.89 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்திரிக்காய் பயிரிடப்பட்டு, மொத்தம் 131.31 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது; இதன் சராசரி உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 19.06 டன்களாகும். தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகியவை முக்கிய உற்பத்தி மாவட்டங்களாகும். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் 0.20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு, மொத்தம் 2.68 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது

தமிழ்நாட்டில் அதிகளவிலான புதிய கத்திரிக்காய் வரத்து உள்ள முக்கிய சந்தை மையங்களாக ஓசூர். திண்டுக்கல், சேலம் மற்றும் கோயம்புத்தூர் சந்தைகள் விளங்குகின்றன. மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மற்றும் தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து கத்திரிக்காய் தமிழ்நாட்டிற்கு வருகிறது.

Advertisement

அதேபோல, தமிழ்நாட்டிலிருந்து சுத்திரிக்காய் கேரளா. கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சந்தைகளுக்குச் செல்கிறது.

இச்சூழலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் சந்தைகளில் கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய கத்திரிக்காய் விலைகளை ஆய்வு செய்து, சந்தைக்
கணிப்பொன்றையும் மேற்கொண்டது.

Advertisement

காலத் தொடர் பகுப்பாய்வு முடிவுகளின்படி அறுவடை காலத்தில் தரமான கத்திரிக்காயின் பண்ணை விலை கிலோவிற்கு சுமார் ரூ.37 முதல் ரூ.38 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இதற்கேற்ப தங்கள் விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சந்தைப்படுத்தல் தகவல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வுகள் மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.
கோயம்புத்தூர் 641 003

தொழில்நுட்ப விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
பேராசிரியர் மற்றும் தலைவர்
காய்கறிப் பயிர்கள் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் 641 003.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நடுவானில் பலமுறை வட்டமடித்த இண்டிகோ விமானம்! கோவையில் மோசமான வானிலையால் பரபரப்பு

கோவையில் மோசமான வானிலை காரணமாக இண்டிகோ விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டு, பின்னர் கோவை வந்தடைந்தது.

Video

கோவையில் தனியார் பேருந்தால் ஏற்பட்ட விபத்து- பொதுமக்கள் வாக்குவாதம்…

கோவை: தனியார் பேருந்தால் வாகன ஓட்டி படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை திருச்சி சாலையில் அதிகவேகமாகச் சென்ற பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், வாகன ஓட்டி...