கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி…
தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என வார்டு பகுதி மக்களுடன் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவையில் கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் பொழுது 44 வது வார்டு கவுன்சிலர் காயத்ரி கோவை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி பேசிய நிலையில் அங்கிருந்த திமுக கவுன்சிலர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர் அதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது அதனை தொடர்ந்து காயத்ரி மாமன்ற மரபை மீறி நடந்து கொண்டதாக கூறி இரண்டு மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று சஸ்பெண்ட் செய்து கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற பொழுது அவரது வார்டு மக்களுடன் வந்த கவுன்சிலர் காயத்ரி மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட வார்டு பொதுமக்கள் மாமன்ற கூட்டத்தில் காயத்ரி வெளியேற்றப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு அவரது சஸ்பெண்டை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய காயத்ரி கடந்த மாமன்ற கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா உட்பட மாநகராட்சி திட்டங்களில் கோடிக்கணக்கில் ஊழல் தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் அந்த புகார் தொடர்பாக மாமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றுதான் கூறியதாகவும் அப்பொழுது தன்னை மான பங்குப்படுத்தி வெளியேற்றி விட்டதாக தெரிவித்தார் அதுமட்டுமின்றி கோவை மாநகராட்சி மேயர் தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறினார்.
தன் களங்கம் ஏற்படுத்தியதாக தெரிவிப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் அதனை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தினார்.
இது குறித்து பேசிய வார்டு மக்கள் கவுன்சிலர் காயத்ரி தங்களது வார்டில் பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும் இந்த சூழலில் இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ததால் தங்கள் வார்டில் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்று தெரிவித்தனர்.





