கோவை: வாகா போன்ற அணிவகுப்பு, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என இந்த ஆண்டு சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் (15.08.2026) சனிக்கிழமை நடைபெறவுள்ள 80வது சுதந்திர தினவிழாவில் காலை 8.50 மணிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
பின்னர், இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறுவது போன்ற அணிவகுப்பு கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் ஆயுதப்படையினரால் நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, வடவள்ளி சவேரா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களின் “இந்தியாவின் 100 ஆண்டுகள்”என்ற தலைப்பிலான கலைநிகழ்ச்சியும்,
ரத்தினபுரி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணாக்கர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும், ஆர்.எஸ்.புரம் நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களின் சமூக வலைத்தளங்கள் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
மேலும். தொண்டாமுத்தூர் அரசு மாணாக்கர்களின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களின் இந்தியாவின் பாதுகாவலர்கள் என்ற தலைப்பிலான கலைநிகழ்ச்சியும்திருச்சி சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொல்லாட்டம் நிகழ்ச்சியும், கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களின் “வளர்ந்த இந்தியா என்ற தலைப்பிலான கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களின் நம்ம ஊரு பெஸ்ட்- என்ற தலைப்பிலான கலைநிகழ்ச்சியும், கணுவாய் அகர்வால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களின் பிட் இந்தியா என்ற தலைப்பிலான கலைநிகழ்ச்சியும், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களின் கரகாட்டம் நிகழ்ச்சியும்,
நேரு விளையாட்டு அரங்கம் கோயம்புத்தூர் (SDAT) சார்பில் ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சியும் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக பங்கு கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்ட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் வீட்டியிலிருந்து கண்டுகளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் சமூக ஊடக கணக்குகளான கீச்சகம் (Twitter) Collector cbe முகநூல் (facebook) Collector Coimbatore ஆகியவைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.





