போதைப் பொருள் இல்லாத தமிழகம்- கோவையில் விழிப்புணர்வு பேரணி…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடுஎன்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், அரசு அலுவலர்கள்கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் போதைக்கெதிரான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 11.08.2026 அன்று பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வும், 12.08,2026 அன்று தினம் மனித சங்கிலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Advertisement

அதன் அடுத்தக்கட்டமாக இன்று போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிறைவு பெற்றது.

இப்பேரணியில், அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை (NSS) மாணவர்கள், குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் குறித்தான விழிப்புணர்வு பதாகைகளை கையில் எந்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Advertisement

மேலும், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்மன மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், குறிப்பாக இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் இப்பேரணியில் எடுத்துரைக்கப்பட்டது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...