திரிஷா நடவடிக்கை… முருகனுக்கு இல்லையா…? கோவையில் நாம் தமிழர் கட்சி புகார்!

கோவை: திரிஷா என்றால் வழக்குப் பதிவு செய்யும் தமிழக அரசு, தமிழ்க் கடவுள் முருகனை அவமதிப்பு செய்யும் தவெகவினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது? என்று கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியினர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

கோவையைச் சேர்ந்த தவெக தொண்டர் மைக்கேல் என்பவர், தமிழ்க் கடவுள் முருகன் குறித்தும், நாம் தமிழர் கட்சியில் உள்ள பெண்கள் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்வதாகக் கூறி, நாம் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து மனு அளிக்க வந்த மாணவர் அணி நிர்வாகி பேரறிவாளன் கூறுகையில்,

“தவெகவைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் தமிழ்க் கடவுள் முருகன் குறித்து ஏட்டில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அவமதிப்பு செய்து வருகிறார். அவர் மீது போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement

திரிஷாவுக்கு ஒன்று என்றால் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு, மக்கள் மனதைப் புண்படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் தவெக தொண்டர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?

Also Read: மதுபான கடைகளை மூட வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Advertisement

மைக்கேல் என்பவர் பெண்கள் குறித்தும் அவதூறாகப் பேசி வருகிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளோம்” என்றார்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...